தமிழகத்தில் பணியாற்றும் 72 ஆயிரம் காவல்துறையினருக்கு மாதந்தோறூம் எரிபொருள் செலவுக்காக, 370 ரூபாய் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் பணியாற்றும் 74 ஆயிரத்து 355 சிறப்பு காவல் ஆய்வாளர்கள், தங்கள் வாகனங்களை இயக்குவதற்காக, மாதத்திற்கு தலா 365 ரூபாய் 75 காசுகள் வழங்க வேண்டுமென, காவல்துறை தலைவர் திரிபாதி கோரிக்கை விடுத்திருந்தார். இது குறித்து கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நடைபெற்ற விவாதத்தின் போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் பணியாற்றும் 72 ஆயிரம் காவலர்களுக்கு தலா 370 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். இதற்காக, உள்துறை மற்றும் நீதித்துறையிலிருந்து அனுமதி பெறப்பட்ட பிறகு, தற்போது புதிய அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், இரண்டாம் நிலை காவலர்கள் முதல், சிறப்பு காவல் ஆய்வாளர்கள் வரை பணியாற்றும் 72 ஆயிரம் காவலர்களுக்கு, மாதந்தோறும் 370 ரூபாய் வழங்கப்படும் எனவும், இதற்காக 30 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post