டெக்ஸாமெதாசோன் மருந்து எதிர்பார்த்த பலனை தரவில்லை – இந்திய மருத்துவர்கள்!

வெண்டிலேட்டர் ஆதரவு தேவையில்லாத நோயாளிகளுக்கு டெக்ஸாமெதாசோன் மருந்து எதிர்பார்த்த பலன் தரவில்லை என இந்திய மருத்துவர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் மார்ட்டின் லாண்ட்ரே கொரோனாவால் பாதிக்கப்பட்டு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ள நோயாளிகளுக்கு டெக்ஸாமெத்தஸோன் மருந்து நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றுவதில் முன்னணியில் உள்ளதாகத் தெரிவித்து இருந்தார். ஆனால் இந்த மருந்தை கொண்டு சிகிச்சை அளிப்பதன் மூலம் வெண்டிலேட்டர் ஆதரவு கொண்ட 8 நோயாளிகளில் ஒருவர் அல்லது ஆக்சிஜன் மட்டும் தேவைப்படும் 25 நோயாளிகளில் ஒருவரின் மரணம் மட்டுமே தடுக்கப்படும் என, உலக சுகாதார அமைப்பால் நிர்வகிக்கப்பட்டுள்ள, கொரோனாவிற்கான மருந்துகளை பரிசோதிக்கும் இந்திய மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. இது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version