சந்திர கிரகணத்தை முன்னிட்டு கங்கை மற்றும் சரயு நதிகளில் ஏராளமானோர் புனித நீராடினர்.
சந்திர கிரகண நிகழ்வை ஒட்டி இந்து மதம் சார்ந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் கோவில்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மூடப்படும். அதன்படி, நேற்றிரவு கோயில்களின் நடை சாத்தப்பட்டது. சந்திர கிரகணம் நிறைவடைந்த நிலையில், புனித நதிகளில் பொதுமக்கள் நீராடினர். உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் ஏராளமானோர் கங்கையில் நீராடி இறைவனை வழிபட்டனர். இதேபோன்று, அயோத்தியிலும் சரயு நதியில் நீராடிய பக்தர்கள் கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினர்.