தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தை பூசம் திருநாளை முன்னிட்டு  பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு மருத்துவ முகாம் மற்றும் அன்னதானமானது வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தை மாதத்தில் முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதம் கடைபிடித்து தை  பூச திருநாளில் முருகனை தரிசிக்க தமிழகத்தின் பல்வேறு இடங்களில்  இருந்து  பழனிக்கு  பாத யாத்திரையாக வருவது வழக்கம்.

திண்டுக்கல் மாவட்டம்   ரெட்டியார் சத்திரம் வழியாக பழனிக்கு செல்லும் பக்தர்களுக்காக பல இடங்களில் அன்னதானம், மருத்துவ முகாம் மற்றும் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பாலம் ராஜக்காப்பட்டி ஊராட்சி மற்றும் சுகாதார மையம்  சார்பில் நடத்திய மருத்துவ முகாமில் பக்தர்களுக்கு மாத்திரைகளும், கால் வலிக்கான தைலமும் வழங்கப்பட்டது. கோட்டூர் ஆவாரம்பட்டியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Exit mobile version