மழையிலும் அத்திவரதரை தரிசனம் செய்த பக்தர்கள்

21ஆம் நாளான இன்று அத்திவரதர் இளமஞ்சள் நிற பட்டாடை அணிந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.

காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசன உற்சவம் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. இந்தநிலையில், 21 நாளான இன்று அத்திவரதர் இளமஞ்சள் நிறத்தில் பட்டாடை அணிந்து காட்சி அளித்து வருகிறார். பஞ்சவர்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்ட நீண்ட மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. அத்திவரதரின் திருமார்பு செண்பக பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் மழை தொடர்ந்து பெய்து வரும் சூழ்நிலையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதலே அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர்.

Exit mobile version