ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.70 லட்சம் வருவாய்

உலகப்புகழ் பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பெறப்பட்ட பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டதில் ரூ.70 லட்சத்திற்கும் மேலாக வருவாயாக கிடைத்துள்ளது.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகள் ஆகிய சன்னதியில் முன்புள்ள உண்டியல்கள் மற்றும் கோவிலுக்கு சொந்தமான நம்புகோவில் உள்பட உபகோவில்களில் உள்ள உண்டியல்கள் அனைத்தும் அதிகாரிகள் முன்னிலையில் எண்ணுவதற்காக திறக்கப்பட்டன. பின்னர் பக்தர்களால் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்ட பணம், இணை ஆணையர் கல்யாணி, முன்னிலையில் எண்ணப்பட்டது.இதில் ரொக்கப்பணம் 73 லட்சத்து 59 ஆயிரத்து 753 ரூபாயும், தங்கம் 61 கிராமும், வெள்ளி 3 கிலோ 32 கிராம் காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் உதவி ஆணையர், கண்காணிப்பாளர் மற்றும் தனியார் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.

Exit mobile version