திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கருப்பணசாமி கோவிலுக்கு 5 ஆயிரம் அறிவாள்களை நேர்த்திக்கடனாக செலுத்தி, பக்தர்கள் வினோத வழிபாடு நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு முத்துலாபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆயிரம் அறுவாள் கோட்டை கருப்பண சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பக்தர்கள் தங்களது நேர்த்தி கடனாக அருவாளை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதனால் தங்களது பிரார்த்தனை நிறைவேறும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது. ஒவ்வொரு வருடமும் தை 3ம் தேதி இக்கோவிலி திருவிழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, நடந்த திருவிழாவில், கலந்து கொண்ட பக்தர்கள், அரிவாளை ஊர்வலமாக கொண்டு வந்து காணிக்கை செலுத்தினர். மொத்தம் 5 ஆயிரம் அரிவாளை காணிக்கை செலுத்திய பக்தர்கள் வினோத வழிபாடு நடத்தினர்.