கார்த்திகை மாத முதல் நாளையொட்டி சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில், ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கினர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்வதற்காக கார்த்திகை மாத முதல் நாள் தொடங்கி 48 நாட்கள் விரதம் இருந்து, ஐயப்பனை தரிசிக்க செல்வது வழக்கம். அதன்படி கார்த்திகை ஒன்றாம் தேதியான இன்று திரளான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கத் தொடங்கியுள்ளனர்.
இதையொட்டி, சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயிலில் அதிகாலை முதலே பக்தர்கள் குவியத் தொடங்கினர். திரளான பக்தர்கள் ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருக்கத் தொடங்கினர்.