மகா சிவராத்திரியையொட்டி சத்தியமங்கலம் அருகே தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்
ஈரோடு மாவட்டம் அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள தொட்டம்மா சின்னம்மா என்றழைக்கப்படும் மகாலட்சுமி, பொம்மையன் பொம்மி கோயிலில் ஆண்டு தோறும் மகா சிவராத்திரியன்று பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்துக்கொள்ளும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு நடைபெற்ற விழாவில் கோவை மாவட்டம் கல்வீராம்பாளையம், வடவள்ளி, உச்சையனூர், தடாகம், வரப்பாளையம், பன்னிமடை, தீத்திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மகாலட்சுமி மற்றும் பொம்மையன் பொம்மி ஆலயங்களில் அலங்கார பூஜை மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் தேங்காய்களை தலையில் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்