அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில், பிரதோஷம், சிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு 4 நாட்களுக்கு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல வனத்துறை மற்றும் கோயில் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. தை அமாவாசை என்பதால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் காலை 6 மணி முதல் 2 மணி வரை மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள் எனவும், முகக்கவசம் அணிந்திருந்தால் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் 200 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.