மகாராஷ்டிர முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிர முதலமைச்சர் பதவியில் இருந்து பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் விலகியுள்ளார்.

மகாராஷ்டிரச் சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பட்னாவிசும் துணை முதலமைச்சராகத் தேசியவாத காங்கிரசின் அஜித் பவாரும் நவம்பர் 23ஆம் தேதி பதவியேற்றனர். சற்று நேரத்திலேயே பாஜக அரசுக்குத் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு இல்லை எனவும், அஜித் பவார் சேர்ந்தது அவரது தனிப்பட்ட விருப்பம் என சரத் பவார் அறிவித்தார். இதையடுத்து பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்தும், உடனடியாகச் சட்டமன்றத்தில் பெரும்பான்மையைக் காட்ட உத்தரவிடக் கோரியும் சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கில் புதன் மாலை 5 மணிக்குள் வெளிப்படையான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவும், சட்டமன்ற நடவடிக்கைகளை நேரலை செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் துணை முதலமைச்சர் பதவியில் இருந்து அஜித் பவார் விலகினார். இதையடுத்து தேவேந்திர பட்னாவிஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.

Exit mobile version