கர்நாடகாவில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 15 பேரும் கலந்து கொள்ளப் போவதில்லை என திட்டவட்டமாக அறிவிவித்துள்ளதால் குமாரசாமி ஆட்சி கவிழ்வது உறுதியாகியுள்ளது. கர்நாடகாவில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பது குறித்து சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 15 பேரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்க போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனநாயக கூட்டணிக்கு 101 எம்.எல்.ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. ஆனால். பாஜகவிற்கு 7 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஆதரவு அளித்துள்ளதால், அக்கட்சியின் பலம் 107 ஆக உள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி, பெரும்பான்மைக்கு தேவையான 106 எம்.எல்.ஏக்களின் ஆதரவை நிரூபிக்கா விட்டால் ஆட்சி கவிழ்ந்து, பாஜக ஆட்சியமைக்க நேரிடும். இதனால் குமாரசாமி அரசு கவிழ்வது உறுதியாகியுள்ளது.