காஷ்மீர் தாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் விவரம் வெளியீடு

காஷ்மீரில் தற்கொலை படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 12 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தானை சேர்ந்த 5 வீரர்களும், பஞ்சாப்பை சேர்ந்த 4 வீரர்களும், உயிரிழந்துள்ளனர். மேலும், உத்தரகாண்டைச் சேர்ந்த 3 வீரர்களும், மேற்கு வங்கம், ஒடிசா, மஹாராஷ்ட்ரா பீஹார், ஆகிய மாநிலங்களை சேர்ந்த 2 வீரர்களும், மத்திய பிரதேசம், கேரளா, கர்நாடகா, ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம், மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த தலா ஒரு வீரர்கள் உட்பட 40 க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

படுகாயமடைந்த வீரர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த கோர தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version