பொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று மாலை அறிவிப்பு

பொறியியல் கலந்தாய்வு தொடர்பான தேதி, அட்டவணை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இன்று மாலை அறிவிக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

பொறியியல் கலந்தாய்வு அட்டவணையை வெளியிடுவது தொடர்பாக சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் ஆலோசனையில் ஈடுபட்டார். ஆலோசனையின் போது தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம் ஷர்மா, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் விவேகானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பொறியியல் கலந்தாய்வு தொடர்பான தேதி, அட்டவணை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இன்று மாலை முறையாக செய்தியாளர் சந்திப்பில் அறிவிக்கப்படும் என அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்தார்.

Exit mobile version