அத்திவரதர் வைபவத்தில் கோயிலை சுற்றி விரிவான மருத்துவ ஏற்பாடுகள்

அத்திவரதர் வைபவத்தில் கோயிலை சுற்றி விரிவான மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. தற்போது வரை 19 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இதையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர், அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் ஆகியோர் அத்திவரதரை தரிசனம் செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், பொதுமக்களுக்கு உபாதைகள் ஏற்படாத வகையில் 10 மருத்துவ முகாம்கள், 20 நடமாடும் மருத்துவக் குழுக்கள், 8 உயிர்காக்கும் வாகன வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

Exit mobile version