சரத்குமாருடன் துணை முதலமைச்சர், அமைச்சர் ஜெயகுமார் சந்திப்பு

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் திருவான்மியூர் இல்லத்தில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவு கோரப்பட்டது. சுமார் அரை மணி நேரம் நடைபெற்ற சந்திப்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார் அதிமுகவிற்கு ஆதரவளிப்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பின்னர், தங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம் என கூறினார்.

Exit mobile version