கூட்டுறவு சங்கங்களை திமுகவினரின் பிடியில் இருந்து மீட்டது அதிமுக அரசு என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கூட்டுறவு, உணவு மற்றும் பாதுகாப்பு துறையின் மானிய கோரிக்கையின் விவாதம் நடைபெற்றது.
அப்போது கூட்டுறவுத்துறை அமைச்சரின் கருத்துக்கு விளக்கமளித்து பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், 22 ஆண்டுகளாக கூட்டுறவு சங்கங்கள் திமுகவினரின் பிடியில் இருந்ததாகக் குற்றம்சாட்டினார்.
கூட்டுறவு சங்கங்களில் புதிய உறுப்பினர்களை சேர்க்காமல் திமுகவினர் தடுத்து வந்ததாகவும் குறை கூறினார். இந்நிலையில் புதிய உறுப்பினர்களை சேர்க்க சட்டப்போராட்டம் நடத்தி உரிமையை பெற்றுத்தந்தவர் புரட்சித் தலைவி ஜெயலலிதா என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.