புதுச்சேரியில் நடைபெற்றுவரும் தேர்தலில் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
புதுச்சேரி நாடாளுமன்றம் மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது. தேர்தலில் முதலமைச்சர் நாராயணசாமி புஸ்சி வீதியில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். இதேபோல புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சுகாதாரத்துறை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார்.
தேர்தலையொட்டி காவலர்கள் உள்பட 7 ஆயிரத்து 617 அரசு ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் மாநிலம் முழுவதும் துணை ராணுவத்தினர் மற்றும் உள்ளூர் போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.