விஜயகாந்துடன் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு

தேமுதிக நிறுவனர் விஜயகாந்தை துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினார்.

மக்களவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு வருகிறது. பாஜக, பாமக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. என்.ஆர். காங்கிரஸ், புதிய தமிழகம் கட்சிகளும் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.

இந்நிலையில், இக்கூட்டணியில் தேமுதிக இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இந்தசூழலில், துணை முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம், விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினார். அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் அப்போது உடன் இருந்தனர்.

Exit mobile version