திருமழிசையில் அமையவுள்ள புதிய பேருந்து முனையம் குறித்து துணை முதலமைச்சர் ஆலோசனை!

சென்னையை அடுத்த திருமழிசையில் அமையவுள்ள புதிய பேருந்து முனையத்திற்கான திட்டம் மற்றும் வடிவமைப்பு குறித்து, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

திருமழிசையில் 24 ஏக்கர் பரப்பில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. அப்போது, பேருந்து முனைய பணிகளை துவங்குவதற்கான ஆயத்த பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளின் நிலை குறித்தும் துணை முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். இக்கூட்டத்தில் துறை சார்ந்த உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Exit mobile version