அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் வாக்கு சேகரிப்பு

திருப்போரூரில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்லவம் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தை தொடங்கினார்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூரில் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பாக அங்குள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாமி தரிசனத்திற்கு பின்னர்,காஞ்சிபுரம் நாடாளுமன்ற வேட்பாளர் மரகதம் குமரவேல், திருப்போரூர் சட்டமன்ற வேட்பாளர் ஆறுமுகம் ஆகியோர் துணை முதலமைச்சரிடம் ஆசி பெற்றனர்.

இதைத்தொடர்ந்து வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்த துணை முதலமைச்சர், மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் அரசாக அதிமுக விளங்கி வருவதாக கூறினார். காவிரி பிரச்சனைக்கு திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தீர்வு காணப்படவில்லை என குற்றம்சாட்டிய அவர், இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு இரு கட்சிகளுமே காரணம் என கூறினார்.

Exit mobile version