துணை முதலமைச்சருக்கு “சர்வதேச வளரும் நட்சத்திரம்” விருது

அமெரிக்காவின் சிகாகோ நகரில் தமிழகத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு  “இன்டர்நேசனல் ரைசிங் ஸ்டார் ஆப் த இயர் ” என்கிற விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

தமிழகத் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். சிகாகோ நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு இன்டர்நேசனல் ரைசிங் ஸ்டார் ஆப் த இயர் என்கிற விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

விருது பெற்ற பின் ஏற்புரையாற்றிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அரசின் சார்பாகவும், மக்களின் சார்பாகவும் விருதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார். விருது பெற்றதன்மூலம் தனது பொறுப்புணர்வு மேலும் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார். இதன்மூலம் மக்கள் பணிகளை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்யக் கடமைப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டேனி டேவிஸ், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் சுதாகர் தலேலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Exit mobile version