மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்திய மக்கள் நலத்திட்டங்களை அரசு நல்ல முறையில் செயல்படுத்தி வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெ.நாராயணனை ஆதரித்து, நடுவக்குறிச்சியில் தீவிர வாக்கு சேகரிப்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டார். அப்போது பேசிய துணை முதலமைச்சர், ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை அதிமுக அரசு வெகுவாக உயர்த்தியுள்ளதாக கூறினார்.
பெண்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்த ஒரே அரசு அதிமுக அரசு தான் என்று அரியகுளம் தேர்தல் பிரசாரத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். தாலிக்கு தங்கம், ஏழை எளிய பெண்களின் கல்விக்கு நிதி என பல நலத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருவதாகவும் துணை முதலமைச்சர் தெரிவித்தார்.
திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிக மோசமான நிலையில் இருந்தது என தருவை பிரசாரத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம்சாட்டினார். திமுக ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு ஆகியவை தலைவிரித்து ஆடியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.