தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. வீட்டுவசதி வாரிய முதன்மைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர். குடியிருப்புப் பகுதிகளில் கிருமி நாசினிகள் தெளிப்பது குறித்து, மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், சென்னை கோயம்பேடு சந்தையில் நோய்த் தடுப்பு பணிகளாக முகக் கவசம் அணிதல், கிருமி நாசினி தெளித்து குப்பைகளை அகற்றுதல், வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.
கோயம்பேடு வணிக வளாகத்தில் உள்ள 10 வாயில்களில் 17 லட்சம் ரூபாய் செலவில் கிருமி நாசினி சுரங்கப்பாதை தெளிப்பான்கள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.