News J :
WATCH NEWSJ LIVE
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை
No Result
View All Result
News J :
No Result
View All Result
Home TopNews

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை அமெரிக்கா பயணம்

Web Team by Web Team
November 7, 2019
in TopNews, செய்திகள், தமிழ்நாடு
Reading Time: 1 min read
0
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை அமெரிக்கா பயணம்
Share on FacebookShare on Twitter

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி லண்டன், அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை பெற்று வந்தார். இதே போன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாளை முதல் 17ந் தேதி வரை அமெரிக்காவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். சிகாகோ, ஹூஸ்டன், வாஷிங்டன், நியூயார்க் நகரங்களுக்கு செல்லும் அவர், தமிழகத்தின் புதிய திட்டங்களுக்கு தேவையான நிதிகள் பெறுவது குறித்து, உலக வங்கியின் தெற்காசிய பிரிவு உயர் அலுவலர்களுடன் விவாதிக்கிறார்.

நாளை அதிகாலை சென்னையிலிருந்து புறப்பட்டுச் செல்லும் அவர், பயணத்தின் முதற்கட்டமாக சிகாகோ சென்றடைகிறார்.

சிகாகோ தமிழ்ச் சங்கம் சார்பாக 9ந் தேதி நடத்தப்படும் குழந்தைகள் தின நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் கலந்து கொள்கிறார்.

10ந் தேதி, American Mutli Ethinic Coalition Inc., சார்பாக நடத்தப்படும் Global Community Oscars 2019 விழாவில் International Rising Star of the Year – Asia Award என்ற விருது துணை முதலமைச்சருக்கு வழங்கப்படுகிறது.

12ந் தேதி சிகாகோ நகர மேயர், இல்லினாய்ஸ் ஆளுநர் மற்றும் முக்கிய பிரமுகர்களை அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

Global Community Oscars 2019 விழா மற்றும் Indian American Business Coalition & American Tamil Entrepreneurs சார்பாக நடத்தப்படும் வட்ட மேசை கருத்தரங்கில் அவர் கலந்து கொள்கிறார்.

13ந் தேதி, வாஷிங்டன் டிசி செல்லும் துணை முதலமைச்சர், Indian American Business Coalition, USA மற்றும் American Mutli Ethinic Coalition Inc., அமைப்புகள் சார்பாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

14ந் தேதி ஹூஸ்டன் நகருக்கு செல்லும் அவர், தமிழ் அமைப்புகள் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, தொழில் முனைவோரிடம் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீடு செய்வது குறித்து கலந்துரையாடுகிறார்.

15ந் தேதி ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்கான Electronics Donor Board-ஐ துணை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

16ந் தேதி நியூயார்க் செல்லும் அவர், Indian American Community & Tamil Associations சார்பாக ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

துணை முதலமைச்சரின் சுற்றுப்பயணத்தின் போது, நிதித்துறை முதன்மை செயலாளர் கிருஷ்ணன் உடன் செல்கிறார். 17ந் தேதி அமெரிக்க பயணத்தை நிறைவு செய்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் திரும்புகிறார்.

Tags: ஓ.பன்னீர்செல்வம்துணை முதலமைச்சர்
Previous Post

மனம் உருகி மனைவியை பார்க்க சென்ற கணவன், நடந்த விபரிதம்!

Next Post

விரைவில் திமுகவில் பெரிய பூகம்பம் வெடிக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்

Related Posts

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை
TopNews

மக்கள் நலனே நமது குறிக்கோள்; 2021 தேர்தல் கூட்டணி தொடர்கிறது – அதிமுக தலைமை அறிக்கை

July 7, 2021
அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை
TopNews

அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட 9 பேர் நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை

July 5, 2021
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு கோரிக்கை
TopNews

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அரசுக்கு கோரிக்கை

June 12, 2021
“மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் திமுகவினர் மீது நடவடிக்கை தேவை”
TopNews

“மாநகராட்சி அதிகாரிகளை மிரட்டும் திமுகவினர் மீது நடவடிக்கை தேவை”

May 24, 2021
“தமிழ்நாட்டில் அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்”
TopNews

“தமிழ்நாட்டில் அதிமுக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கும்”

April 6, 2021
ஆ.ராசாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்!
TopNews

ஆ.ராசாவிற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்!

March 28, 2021
Next Post
விரைவில் திமுகவில் பெரிய பூகம்பம் வெடிக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்

விரைவில் திமுகவில் பெரிய பூகம்பம் வெடிக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்

Discussion about this post

அண்மை செய்திகள்

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

விசிக துணைமேயருக்கு எதிராக புகார்! கடலூரில் திமுக ஆடும் அரசியல் ஆட்டம்!

September 28, 2023
புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

புற்றுநோயாளியின் மருந்தில் அலட்சியம்! மாத்திரையை மாற்றி வழங்கியதால் விபரீதம்!

September 28, 2023
எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

எங்க கவுன்சிலர ஒரு வருஷமா காணோம்… நாகை கவுன்சிலரை தேடும் வார்டு மக்கள்!

September 28, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!

September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!

September 27, 2023
  • About
  • advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2022 Mantaro Network Private Limited.

No Result
View All Result
  • ⠀
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • அரசியல்
  • சினிமா
  • உலகம்
  • க்ரைம்
  • விளையாட்டு
  • சிறப்பு களம்
  • Tea Kadai – டீ கடை

© 2022 Mantaro Network Private Limited.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

Go to mobile version