துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் முதல் கட்ட சூறாவளி பிரசாரத்தை வரும் 18-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக, அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
வருகிற 18-ம் தேதி மாலை 4 மணிக்கு திருவொற்றியூர் தேரடி பகுதியில் அதிமுக வேட்பாளர்களான திருவொற்றியூர் தொகுதி வேட்பாளர் கே.குப்பன் மற்றும் மாதவரம் தொகுதி வேட்பாளர் மாதவரம் மூர்த்தி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
பொன்னேரியில், பொன்னேரி தொகுதி அதிமுக வேட்பாளர் சிறுணியம் பலராமன்,
கும்மிடிபூண்டி தொகுதி பாமக வேட்பாளர் எம்.பிரகாஷ் ஆகியோரை ஆதரித்து துணை முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார்.
இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், திருவள்ளூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பி.வி.ரமணா,
திருத்தணி தொகுதி வேட்பாளர் கோ. அரியை ஆதரித்து வாக்கு திரட்டுகிறார்.
அம்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் ஆவடி தொகுதி வேட்பாளர் அமைச்சர் பாண்டியாரஜன், அம்பத்தூர் தொகுதி வேட்பாளர் அலெக்சாண்டர் ஆகியோரை ஆதரித்து துணை முதலமைச்சர் பிரசாரம் மேற்கொள்கிறார்.
தொடர்ந்து, போரூர் சந்திப்பில் மதுரவாயல் தொகுதி அதிமுக வேட்பாளர் பென்ஜமின், பூந்தமல்லி தொகுதி பாமக வேட்பாளர் ராஜமன்னார் ஆகியோருக்கும் வாக்கு சேகரிக்க உள்ளார்.
வருகிற 19-ம் தேதி மாலை 4 மணிக்கு பல்லாவரத்தில் ஆலந்தூர் தொகுதி வேட்பாளர் வளர்மதி, பல்லாவரம் தொகுதி வேட்பாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், தாம்பரம் தொகுதி வேட்பாளர் டி.கே.எம்.சின்னையா ஆகியோருக்கு ஆதரவாக துணை முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார்.
படப்பையில் உத்திரமேரூர் தொகுதி வேட்பாளர் சோமசுந்தரம், காஞ்சிபுரம் தொகுதி வேட்பாளர் மகேஷ்குமார், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி வேட்பாளர் கே. பழனி ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் ராட்டினம்கிணறு பகுதியில் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கஜேந்திரன், மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல் ஆகியோரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.
திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் செய்யூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத், திருபோரூர் தொகுதி பாமக வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகம்,
மேடவாக்கம் பகுதியில் சோழிங்கநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி. கந்தன் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
மயிலாப்பூர் பகுதியில் வேளச்சேரி தொகுதி வேட்பாளர் அசோக், மயிலாப்பூர் தொகுதி நட்ராஜ் ஆகியோரை துணை முதலமைச்சர் ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.
20-ம் தேதி மேற்கு மாம்பலம் ஆரிய கவுடா சாலையில் சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர் சைதை துரைசாமி.
தியாகராயர் தொகுதி வேட்பாளர் பி.சத்யா, விருகம்பாக்கம் தொகுதி வேட்பாளர் விருகை ரவி மற்றும் அண்ணாநகரில், அண்ணாநகர் தொகுதி வேட்பாளர் கோகுல இந்திரா, வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளர் ஜே.சி.டி. பிரபகார் ஆகியோர் ஆதரித்து துணை முதலமைச்சர் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
திரு.வி.க. நகரில் ராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான ஜெயக்குமார், திரு.வி.க. நகர் தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் கல்யாணி ஆகியோரை ஆதரித்து துணை முதலமைச்சர் வாக்கு சேகரிக்க உள்ளார்.
துறைமுகத்தில், துறைமுகம் தொகுதி பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம், எழும்பூர் தொகுதி தமிழக மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ஜான்பாண்டியன்
மற்றும் சேப்பாக்கத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி பாமக வேட்பாளர் கஸ்ஸாலி, ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு ஆகியோருக்கு ஆதரவாக துணை முதலமைச்சர் வாக்கு சேகரிக்க உள்ளார்.
வருகின்ற 21-ஆம் தேதி மாலை 4 மணிக்கு ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடையில் அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளர் சு.ரவி,
ராணிப்பேட்டை தொகுதி வேட்பாளர் எஸ்.எம். சுகுமார், சோளிங்கர் தொகுதி பாமக வேட்பாளர் ஏ.எம். கிருஷ்ணன், ஆற்காடு தொகுதி பாமக வேட்பாளர் கே.எல். இளவழகன் ஆகியோரை ஆதரித்து துணை முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார்.
காட்பாடியில் வேலூர் தொகுதி வேட்பாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, காட்பாடி அதிமுக வேட்பாளர் வி.ராமு மற்றும் பள்ளிகொண்டா பேருந்து நிலையம் அருகில் அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் த.வேலழகன்,
குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் பரிதா, கே.வி.குப்பம் தொகுதி புரட்சி பாரதம் வேட்பாளர் பூவை எம்.ஜெகன் மூர்த்தியார் ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்.
வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகில் ஜோலார்பேட்டை தொகுதி வேட்பாளரும், அமைச்சருமான கே.சி. வீரமணி, வாணியம்பாடி தொகுதி வேட்பாளர் ஜி.செந்தில்குமார்.
ஆம்பூர் தொகுதி வேட்பாளர் நஜர்முஹம்மத், திருப்பத்தூர் தொகுதி பாமக வேட்பாளர் டி.கே. ராஜா ஆகியோருக்கு ஆதரவாக துணை முதலமைச்சர் வாக்கு சேகரிக்க உள்ளதாக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.