அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், 2023ம் ஆண்டுக்குள் வீடில்லாத ஏழை மக்கள் அனைவருக்கும் கான்கரீட் வீடுகள் கட்டி தரப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.
சென்னை மாதவரம் தொகுதி அதிமுக வேட்பாளர் வி. மூர்த்தி, திருவொற்றியூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே. குப்பன் ஆகியோருக்கு ஆதரவாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பரப்புரை மேற்கொண்டார்.
திருவொற்றியூரின் பிரசத்தி பெற்ற வடிவடையம்மன் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு பரப்புரை செய்த துணை முதலமைச்சர்,
தமிழ்நாட்டில் வீடில்லாத ஏழை மக்களுக்கு இதுவரை 6.5 லட்சம் கான்கரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பொன்னேரி தொகுதி அதிமுக வேட்பாளர் சிறுணியம் பலராமன், கும்மிடிப்பூண்டி பாமக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அவர், தேசிய அளவில் பல்வேறு துறைகளில் எண்ணற்ற விருதுகளை குவித்த ஒரே மாநிலம் தமிழ்நாடு என்றார்.
விவசாய நலன் காக்கவே டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அதிமுக அரசு அறிவித்தது என்றும் துணை முதலமைச்சர் குறிப்பிட்டார்.