இடைத்தேர்தலில் துணை முதலமைச்சர் பிரசாரம் பயண விவரம்

இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்யும் நாட்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து வரும் 13, 14, 18 ஆகிய தேதிகளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்கிறார். நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து வரும் 15, 16, 17 ஆகிய தேதிகளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

Exit mobile version