அமெரிக்காவில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் துணை முதல்வர் தரிசனம்

ஹூஸ்டன் நகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கோயில் நிர்வாகம் சார்பில் சீரமைக்கப்பட்ட திருமண மண்டபத்தை திறந்து வைத்தார்.

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை பெறுவது குறித்து பல்வேறு நிறுவனங்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இதையடுத்து, ஹூஸ்டன் நகரில் உள்ள மீனாட்சி அம்மன் கோயிலில் தரிசனம் செய்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கோயில் நிர்வாகம் சார்பில் சீரமைக்கப்பட்ட திருமண மண்டபத்தை திறந்து வைத்தார். அதன் பின்னர், மீனாட்சி கோயில் நிர்வாகம், ஹூஸ்டன் தமிழ் ஆய்வு இருக்கை மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பாக நடைபெற்ற விழாவில் டெக்சாஸின், ஃபேர்லாண்ட் மேயார் டாம்ரிட் அன்றைய தினத்தை ”ஓபிஎஸ் டே” என்று அறிவித்து கவுரவப்படுத்தினார்.

பத்மினி நங்கநாதன் அமைப்பு சார்பில், துணை முதலமைச்சருக்கு ”பண்பின் சிகரம்” என்ற பட்டமும், மெட்ரோப்லெக்ஸ் தமிழ் சங்கம் சார்பில் “வீரத்தமிழன்” என்ற பட்டமும் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தொழில்முனைவோர் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.

 

Exit mobile version