பணமதிப்பிழப்பு ரூபாய் நோட்டுகளை கொண்டு சசிகலா சொத்து குவிப்பு

பணமதிப்பிழப்பு ரூபாய் நோட்டுகளை கொண்டு சசிகலா சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

சசிகலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துச் சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை அறிக்கை தாக்கல் செய்து உள்ளது. அதில் 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதிக்குப் பிறகு பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளாக, ஆயிரத்து 674 கோடியே 50 லட்சத்தை சசிகலா வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி ஒரு சுற்றுலா விடுதி, இரண்டு வணிக வளாகங்கள், ஒரு மென்பொருள் நிறுவனம், ஒரு சர்க்கரை ஆலை, ஒரு காகித ஆலை மற்றும் 50 காற்றாலைகளை சசிகலா வாங்கியுள்ளார் என்றும் வருமான வரித்துறை குறிப்பிட்டுள்ளது. இவைகள் பல நூறு கோடி ரூபாய்  மதிப்புள்ளவை என்றும் அதில் கூறியுள்ளது.

Exit mobile version