இந்து அறநிலையத்துறை சார்பில் யானைகளுக்கான புத்துணர்வு முகாம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்று வரும் யானைகள் புத்துணர்வு முகாமில் யானைகளுக்கு 5 வகையான பசுந்தீவனங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், யானைகளுக்கான நல்வாழ்வு புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. 48 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கோவில்களில் இருந்து 20-க்கு மேற்பட்ட யானைகள் பங்கேற்றுள்ளன. இங்கு அவைகளுக்கு நடைப்பயிற்சி, மருத்துவப் பரிசோதனை, சத்தான உணவுகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. அதேபோல், கூந்தப்பனை, சோளத்தட்டு, மசால்புல், தென்னை பனை ஓலைகள், கரும்பு உள்ளிட்ட பசுந்தீவனங்கள் யானைகளுக்கு வழங்கப்படுகின்றன. இதனை யானைகள் ஆர்வத்துடன் உண்டு மகிழ்கின்றன.              
 

Exit mobile version