அசாம் மாநிலத்தில் காமாக்யா கோவிலில் தியோதானி திருவிழா

அசாம் மாநிலத்தில் உள்ள, காமாக்யா கோவிலில் புகழ்பெற்ற தியோதானி திருவிழா தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், மேள, தாளம் முழங்க ஆடி சுவாமி தரிசனம் செய்தனர்.

அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள நீலாச்சல் மலைச் சாரலில் அமைந்துள்ள ‘காமாக்யா’ கோயிலில், மிகவும் பிரசித்தி பெற்றது, தியோதானி திருவிழா. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா நேற்று தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ஆடு, புறா போன்றவற்றை பலி கொடுத்து, வழிபாடு நடத்தினர். பலி கொடுத்த விலங்குகளின் ரத்தத்தை உடல் முழுவதும் பூசிக்கொண்டு வீதிகளில், மேள, தாளம் முழங்க அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இந்த விழாவினை காண நாட்டின் பிற மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் குவிந்திருந்தனர்.

Exit mobile version