மேற்கு வங்கத்தில் பிரசாரம் செய்ய உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு வங்கத்தில் கணிசமான அளவு இடங்களை பிடிக்க பாஜக திட்டமிட்டு வருகிறது. பாஜக இதுவரை ஆளாத மாநிலங்களில் மேற்கு வங்காளத்தில் அக்கட்சிக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. இதனை தேர்தல் வெற்றியாக மாற்ற அக்கட்சி முயற்சித்து வருகிறது.
இதனையடுத்து தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்தில் உத்தரபிரதேச முதலமைச்சர், யோகி ஆதித்யநாத் கலந்து கொள்ளும் பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அக்கட்சியினர் ஏற்பாடு செய்து இருந்தனர். ஆனால், பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு மேற்கு வங்க அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால் மம்தா பானர்ஜி – பாரதிய ஜனதா இடையேயான மோதல் போக்கு வலுத்துள்ளது.