கரூரில் டெங்கு பரவுவதை தடுக்க 225 பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் முழுவதும் டெங்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கரூர் நகராட்சிக்குட்பட்ட காமராஜர் தெருவில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வீடுவீடாக சென்று ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூரில் டெங்கு பரவுவதை தடுக்க 225 பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.