காஞ்சிபுரத்தில் டெங்கு கொசுக்கள் பற்றின ஆய்வு – நவீன அரிசி ஆலைகளுக்கு மாவட்ட ஆட்சியர் 25 ஆயிரம் ரூபாய் அபராதம்

காஞ்சிபுரத்தில் டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் செயல்படும் நவீன அரிசி ஆலைகளுக்கு மாவட்ட ஆட்சியர் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

பருவநிலை மாற்றத்தால், பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரிசி ஆலைகளில் ஆட்சியர் பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, டெங்கு கொசுக்களை உற்பத்தி செய்யும் வகையில் செயல்படும் ஆலைகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, ஆட்சியர் உத்தரவிட்டார். மேலும், காஞ்சிபுரம் பெருநகராட்சிக்கு உட்பட்ட பஞ்சுப்பேட்டை, ஒலிமுகமது பேட்டை, பல்லவர்மேடு, புத்தேரி பகுதிகளில் உள்ள நவீன அரிசி ஆலைகளில் மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய, ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version