இலங்கையில் நடைபெற்ற படுகொலைகளை கண்டித்தும் பயங்கரவாதத்தை எதிர்த்தும் தமிழ்நாடு ஜமாத் அமைப்பினர் சார்பில் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்பினை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு ஜமாத் அமைப்பினர் சார்பில் மாவட்ட தலைவர் பீர் முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கையில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் இறந்த பொதுமக்களுக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.