திண்டுக்கல் மாவட்டம் கரிசல்பட்டியில், இரும்புப் பொருட்கள் தயாரிக்கும் கொல்லம்பட்டறை தொழிலாளர்கள், அழிந்து வரும் இரும்புத் தொழிலை பாதுகாக்க அரசு உதவிட வேண்டுகோள் விடுத்துள்ளனர்…
கரிசல்பட்டி பகுதியில் பாரம்பரியமாக கொல்லம்பட்டறை தொழிலில் சில குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. முன்பு 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த தொழிலில் ஈடுபட்டு வந்தன. கூலிக்கு ஆள் வைத்து வேலை செய்தால் வருமானம் கிடைக்காது என்பதால், கணவன் மனைவி இருவரும் வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது, கருக்கு அறுவாள், களைகொத்து உள்ளிட்ட சிறிய வகை மண்வெட்டிகள், அரிவாள்கள் போன்றவைகள் செய்து தர ஆர்டர்கள் வரும் நிலையில், நஷ்டத்தில் இயங்கி வரும் இரும்புப் பட்டறை தொழிலால், அதனை செய்து தர முடியவில்லை எனவும், இதனால், அரசு இந்த தொழில் அழியாமல் பாதுகாக்க உதவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.