இந்தியாவைப் போன்று அமெரிக்காவிலும் டிக்டாக் செயலி தடை செய்யப்பட வேண்டும் என அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லடாக் எல்லை மோதலை தொடர்ந்து, சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 59 செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விளக்கமளிக்கபட்டது. இந்தநிலையில், தேச பாதுகாப்பை கருத்தில் கொண்டு டிக்டாக்கிற்கு தடை விதிக்க வேண்டும் என அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதுகுறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக அமெரிக்க அரசு செயலாளர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.