இந்தியாவில், உருமாற்றம் அடைந்த டெல்டா வகை கொரோனா வைரஸ், இதுவரை 98 நாடுகளுக்கு பரவியுள்ளதாக, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்து.
வாராந்திர தொற்றுநோய் குறித்த அறிக்கையை வெளியிட்டு பேசிய உலக சுகதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் ((Tedros Adhanom)), மிகவும் கொடிய வைரசான டெல்டா, தொடர்ந்து உருமாற்றம் அடைந்து வருவதாக தெரிவித்தார்.
உலகின் பல நாடுகளில் டெல்டா வகை வைரஸ் பரவிவிட்டதாகவும், இதுவரை 98 நாடுகளில் டெல்டா வகை வைரஸால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.