காவிரியில் கர்நாடக அரசு, உடனடியாக தண்ணீரை திறந்து விட வேண்டும் என டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குருவை சாகுபடியை போர் தண்ணீரை கொண்டு தொடங்கியுள்ள நிலையில் ஆற்றுநீர் வந்தால் தான் நல்ல மகசூலை பெற முடியும் என்பதால் விவசாயிகள் இக்கோரிக்கையை விடுத்துள்ளனர். கடந்த மாதம் 28ஆம் தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் குருவை சாகுபடிக்காக தமிழகத்திற்கு 9 புள்ளி 19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என உத்திரவிடப்பட்டது. ஆனால் மழை பெய்யவில்லை என கூறி கர்நாடக அரசு தண்ணீரை திறந்து விட தாமதப்படுத்தி வருகிறது. இந்தநிலையில் காவிரியில் உடனடியாக தண்ணீரை திறக்க வேண்டும் என கர்நாடக அரசை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.