வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியப் பெருங்கடலில் கன்னியாகுமரிக்கும் தெற்கு இலங்கைக்கு தென்மேற்கு பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கில் சுழற்சி நீடித்து வருகிறது. இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்றும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தென்சீனக் கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒன்று உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், ஜனவரி 7ஆம் தேதி அல்லது 8ஆம் தேதி, தமிழக கடலோரப் பகுதியை நோக்கி அது நகர வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.