டெல்டா மாவட்ட பாசன வசதிக்காக கல்லணை இன்று திறக்கப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கனமழையால் கர்நாடக அணைகளில் இருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், மேட்டூர் அணை 100 அடியை தாண்டியது. இதையடுத்து, கடந்த 13ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீரை திறந்து வைத்தார். திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வந்தடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, டெல்டா மாவட்ட சம்பா சாகுபடிக்காக கல்லணை இன்று காலை திறக்கப்படுகிறது. இதன் மூலம் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 12 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.