மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிராவிற்கு அனுப்பி வைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அனுப்பப்பட்டன.

ஆரணி மற்றும் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிகளுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அனுப்பப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 ஆயிரத்து 378 கட்டுப்பாட்டு இயந்திரம், 2 ஆயிரத்து 479 விவிபேட் இயந்திரங்கள், 3 ஆயிரத்து 566 பைலட் இயந்திரங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இதில் 2 ஆயிரத்து 300 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 2 ஆயிரத்து 370 விவிபேட் இயந்திரங்கள் அனுப்பப்பட்டன. முன்னதாக விவிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளை பாதுகாப்பாக வைக்கும் பணியில் ஐம்பதிற்கும் மேற்பட்ட அலுவலர்கள் ஈடுபட்டனர்.

Exit mobile version