டெல்லி மாநில எல்லைகள் நாளை முதல் மீண்டும் திறப்பு!

டெல்லி மாநில எல்லைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டெல்லி மாநில எல்லைகள் ஒரு வார காலமாக மூடப்பட்டிருந்தன. டுள்ளன. அத்தியாவசிய போக்குவரத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மாநில எல்லைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக டெல்லி மக்கள் கருத்துகளை வழங்கலாம் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்து இருந்தார். இதையடுத்து, மக்கள் பலரும் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். டெல்லி ஆளுநர் உள்ளிட்டோர் உடனான பல்வேறு கட்ட ஆலோசனைக்கு பிறகு, மாநில எல்லைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுவதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Exit mobile version