டெல்லி தொடர் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

டெல்லியில் தொடர்ந்து பனிப்பொழிவு நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் மற்றும் விமானங்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்த ஆண்டு கடுமையான பனிப்பொழிவு நிலவுகிறது. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வராமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.அதிகாலையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் செல்பவர்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றனர். அதிகாலை வேளைகளில் நடைபயணம் செல்பவர்களும் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.நடைபாதைகளில் வசித்து வருபவர்கள், இரவுநேர முகாம்களில் தொடர்ந்து அதிகளவில் தஞ்சமடைந்து வருகின்றனர்.

அவர்களுக்கு கம்பளி போர்வைகள் வழங்கப்பட்டுள்ளன.இந்நிலையில் டெல்லியில் நிலவிவரும் கடும்குளிர் காரணமாக அங்கு ரயில் மற்றும் விமான சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.வெளி மாநிலங்களுக்கு செல்வதற்காக ரயில்நிலையங்களுக்கு வந்த பயணிகள், ரயில்கள் ரத்தானதால் ரயில் நிலையங்களிலேயே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.இதேபோன்று, உத்தர பிரதேசத்திலும் பல பகுதிகளில் கடுங்குளிர் காரணமாக ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Exit mobile version