டெல்லியில் காற்று மாசு மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில் பள்ளி மாணவர்களுக்குக் காற்று மாசை வடிகட்டும் முகமூடி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.
டெல்லியில் தொழிற்சாலைப் புகை, வாகனப் புகை ஆகியவற்றால் காற்று மாசுபாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்று காலையில் இந்தியா கேட், தயான்சந்த் விளையாட்டரங்கம் ஆகிய பகுதிகளில் கடும் புகைமூட்டம் சூழ்ந்திருந்தது. பார்வைப் புலப்பாடு குறைந்து காணப்பட்டதால் வாகனங்கள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி மெதுவாகச் சென்றன.
புகைமூட்டத்தால் மூச்சுக்கோளாறு ஏற்படுவதைத் தடுக்கப் பள்ளி மாணவர்களுக்குக் காற்று மாசை வடிகட்டும் முகமூடி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதற்குப் பஞ்சாப், அரியானா மாநிலங்களில் வைக்கோலை எரிப்பதே காரணம் எனக் குற்றஞ்சாட்டினார்.