டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கல்விக்கட்டணம், தேர்வுக்கட்டணம், விடுதிக்கட்டணம் ஆகியவை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. இதைத் திரும்பப் பெற வேண்டும் எனப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தினர் கடந்த 15 நாட்களாக வலியுறுத்தி வந்தனர். கோரிக்கையை நிர்வாகம் ஏற்காத நிலையில் இன்று பல்கலைக்கழக வாயிலில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்கலைக்கழகத்துக்குள் மாணவர்கள் வருவதைத் தடுக்கக் காவல்துறையினர் இரும்புத் தடுப்புகளால் அரண் அமைத்துள்ளனர். தடையரணை உடைத்துக்கொண்டு உள்ளே வர மாணவர்கள் முயல்வதும், அவர்களைக் காவல்துறையினர் நெருக்கித் தள்ளுவதும் என அப்பகுதியில் பதற்றமும் பரபரப்பும் நிலவுகிறது. பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் இன்று குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு கலந்துகொண்டதும், அதையொட்டிப் போராட்டம் தீவிரமடைந்துள்ளதும் குறிப்பிடத் தக்கது.

Exit mobile version