உச்சக்கட்டத்தை அடைந்துள்ள டெல்லி குளிர் : விமான மற்றும் ரயில் சேவை பாதிப்பு

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டது. ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

டெல்லியில் குளிர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.இதுவரை இல்லாத 5.4 டிகிரி செல்சியஸிற்கு குளிர் வாட்டுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. ராம்லீலா மைதானம் உள்ளிட்ட பொது இடங்களில் மக்கள் தீயை மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர். காலை 10 மணி வரை குளிர் வாட்டுவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடும் பனிமூட்டம் காரணமாக விமான போக்குவரத்து ரத்தானது. ரயில் போக்குவரத்தும் முடங்கியதால், பயணிகள் அவதிக்கு ஆளாகினர். கடும் பனி மூட்டம் மற்றும் மழையால் டெல்லி சத்யம் சினிமாஸ் அருகே பேருந்து  விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் லேசான காயங்களுடன் தப்பினர்.

Exit mobile version