டெல்லியில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43ஆக அதிகரிப்பு

டெல்லியில் அதிகாலை நிகழ்ந்த பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43ஆக அதிகரித்துள்ளது.

ஜான்சி சாலையில் அனாஜ் சந்தைப் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 6 மாடி கட்டிடத்தில் பற்றி தீ கொளுந்துவிட்டு எரிந்தது. விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில், கட்டிடத்திற்குள் இருந்த 35 பேர் உயிரிழந்தனர். 50க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்களில் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 

டெல்லி தீ விபத்து கொடூரமானது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இதுபற்றி பதிவிட்டுள்ள, தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் பூரண குணமடைய வேண்டுவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version