டெல்லி கிரிக்கெட் சங்க ஆண்டு பொது கூட்டத்தில் கைகலப்பு

டெல்லி கிரிக்கெட் சங்க ஆண்டு பொது கூட்டத்தின் போது, நிர்வாகிகள் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், டெல்லி கிரிக்கெட் சங்கத்தை கலைக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பியுமான கவுதம் காம்பீர் வலியுறுத்தி உள்ளார்.

டெல்லி கிரிக்கெட் சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் இருந்த நிர்வாகிகள் சிலர் கைகலப்பில் ஈடுபட்டனர். ஆண்டு நிதி அறிக்கையில் குளறுபடி நடந்துள்ளதாகவும், சங்க நிர்வாகிகளை நியமித்ததில் முறைகேடு நடந்துள்ளதாகவும் கூறி அவர்கள் மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

Exit mobile version